இந்தியா செய்திகள்

இந்திய எல்லைக்குள் சீனா ராணுவ வீரர்கள் ஊடுருவல்

31 Jul 2017

பூடானின் டோக்லாமை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை தடுத்து கொண்டிருக்கிறது நமது ராணுவம். இதனால் சிக்கிம் எல்லையில் ஒரு மாதத்துக்கும் மேலாக போர் பதற்றம் நீடிக்கிறது.

இந்த நிலையில் நாட்டின் மற்றொரு எல்லையான உத்தரகாண்ட் பகுதியியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 19-ந் தேதியன்று சமோலி எல்லையை தாண்டி 1 கி.மீ தூரத்துக்கு பரஹோத்தி பகுதியில் ஆயுதங்களுடன் சீன ராணுவத்தினர் நடமாடியுள்ளனர். அவர்களை எல்லை படையினர் விரட்டியடித்துள்ளனர்.

மேலும் அதேநாளில் உத்தரகாண்ட் வான்பரப்பில் சீன ராணுவ ஹெலிகாப்டர் வட்டமடித்து சென்றிருக்கிறது.

ஜூலை 25 ம் தேதி உத்தரகண்ட் மாநிலம்  சாமோலி மாவட்டத்தில்   பாரஹோட்டி காலை 9 மணியளவில் சுமார் 200 மீட்டர் வரை இந்திய எல்லைக்குள் வந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 26-ந் தேதியன்றும் சீன ராணுவத்தினர் மீண்டும் எல்லை தாண்டி அத்துமீறியுள்ளனர்.

ராணுவ வீரர்கள் வழக்கம் போல் வந்தனர் மற்றும் அந்த இடத்தை விட்டு வெளியேறும் படி கால்நடை உரிமையாளரிடம் கேட்டார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு வீரர்கள் வெளியேறிவிட்டனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 350 கி.மீ. சீனாவுடனான எல்லைப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்