உலகம் செய்திகள்

இந்தியாவுடன் அமெரிக்கா ஆளில்லா விமான ஒப்பந்தம்

29 Oct 2017

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆயுதம்தாங்கி ஆளில்லா விமானங்களை சப்ளை செய்ய உள்ளது.

இதற்காக 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு தனது ஆட்சேபத்தை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் நபீஸ் ஜக்காரியா கூறுகையில், “தெற்காசியாவின் போர்த்திறம் சார்ந்த நிலைத்தன்மையை பலவீனப்படுத்தக்கூடிய அத்தகைய நடவடிக்கைகளில் கூடுதல் பிராந்திய சக்திகள் கவனமாக இருக்க வேண்டும். ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது மோதலுக்கான வாய்ப்பின்மையை குறைக்கலாம். ஏனெனில் இது, ராணுவத்தின் தவறான செயல்களை ஊக்குவிக்கலாம்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், “ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்கள் சப்ளை செய்வது, ஏவுகணை தொழில் நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு (எம்.டி.சி.ஆர்.) உள்ளிட்ட ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆணையங்களின் வழிகாட்டுதல்கள்படிதான் நடைபெறுகிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV