இலங்கை செய்திகள்

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பியவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதில் பிரச்சினை?

13 Jun 2018

யுத்தம் காரணமாக, வடக்கில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின் மீண்டும் வடக்கில் மீள்குடியமர்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

“எமது பிள்ளைகளை வடக்கிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக அனுமதி கோரும் போது,  பாடசாலை அதிபர்கள், அந்நாட்டு பிறப்புச் சான்றிதழை காரணம் காட்டி, எமது பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கான அனுமதியை மறுத்து வருகின்றனர்” என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்