உலகம் செய்திகள்

இந்தியர்கள் யாரும் காயமடையவில்லை இந்திய தூதரகம் தகவல்

01 Nov 2017

உலக வர்த்தக மையம் அருகே சாலையில் இருசக்கர வாகனங்களுக்கான பகுதியில் டிராக்டரை ஓட்டி சென்று உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அமெரிக்காவின் முக்கிய பகுதியில் பயங்கரவாதி கொடூரமான தாக்குதலை முன்னெடுத்து உள்ளது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, இங்கிலாந்து உள்பட உலக நாடுகள் தங்களுடைய கண்டங்களை பதிவு செய்து வருகிறது.

 “பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் யாரும் காயமடையவில்லை என்றே நியூயார்க் நகர போலீஸ் தகவல்கள் தெரிவிக்கிறது.” என இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக முழு தகவல்களை பெறுவதற்கு இந்திய தூதரகம் நியூயார்க் போலீசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேற்கத்திய நாடுகளில் பயங்கரவாதிகள் சமீப காலமாக தங்களுடைய ஆயுதமாக டிராக்டர்களை பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 2016 ஜூலையில் பிரான்ஸ் நாட்டின் நிஸ் நகரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது கனரக வாகனம் ஏற்றப்பட்டது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டவன் ஓட்டிய வாகனம் பொதுமக்கள் மீது ஏற்றப்பட்டதில்  84 பேர் பலியாகினர். 434 பேர் காயம் அடைந்தனர்.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV