07 Aug 2021
நமது கண்கள் மற்றும் அதன் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சிறந்து இயங்கினால் மட்டுமே நம்மால் நமது வாழ்க்கையை பிரச்சனை இல்லாமல் நகர்த்தி செல்ல முடியும். அந்த வகையில், கண்களின் நலனுக்கு என்ன செய்யலாம் என காணலாம்.
1. கண்களின் நலனை பாதுகாக்க விரும்பும் நபர்கள் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்று சாறுகளையும் ஒன்றாக சேர்த்து குடிக்கலாம். இந்த பழச்சாறை ஆங்கிலத்தில் ஏ.பி.சி பழச்சாறு என்று அழைப்பார்கள். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ கண்களுக்கு நல்லது.
2. பீட்ரூட்டில் இருக்கும் லூட்டின் ஜியாசாந்தைன் விழித்திரையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதனைப்போன்று, தக்காளி பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கண்களில் புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் பிரச்சனை போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும். கண்களில் ஏற்படும் பல்வேறு நோய்களை தடுக்க உதவும்.
3. பொதுவான அழகு சாதன பொருட்களில் அதிகளவு சேர்க்கப்படும் கற்றாழை ஜெல்லை கண்கள் பிரச்சனைக்கு குணப்படுத்த பயன்படுத்தலாம். கற்றாழை சாறை பருகி வந்தால் கண்பார்வை திறன் மேம்பட்டு, கண்புரை பிரச்சனை சரியாகும். கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.
4. புளூ பெர்ரி பழச்சாறை குடித்து வந்தால் கண்களில் புரை ஏற்படாது. இதனைப்போன்று புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற பாதிப்பில் இருந்தும் தப்பிக்கலாம். கண்களின் பார்வைத்திறனை மேம்படுத்தலாம். ஆரஞ்சு பழச்சாறை குடித்து வந்தால் கண்பார்வை குறைபாடு பிரச்சனை ஏற்படாது. தினமும் ஆரஞ்சு பழம் அல்லது ஆரஞ்சு பழச்சாறு குடிக்கலாம். மஞ்சள் நிறத்தில் உள்ள வாழைப்பழங்களை சாப்பிடுவதும் பார்வையை தெளிவாக்கும்.