கனடா செய்திகள்

இடைத்தேர்தலில் NDP கட்சி வெற்றி

17 Mar 2023

ஹமில்டனில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ndp கட்சி வேட்பாளர் சாரா ஜாமா வெற்றியுள்ளார்.

நீண்ட காலமாக ஹமில்டன் மத்திய தொகுதியில் என்டிபி கட்சி தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் முன்னாள் தலைவர் அன்றியோ ஹோர்வாத் நீண்ட காலமாக இந்த தொகுதியை பிரதிநிதித்துவம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாமா நடைபெற்ற இடைத்தேர்தலில் 54 வீதமான வாக்குகளை பெற்று வெற்றி உள்ளார்.

சுகாதார நலன்கள் வாடகை குடியிருப்பாளர்களின் நலன்கள் போன்றவற்றை உறுதி செய்வதற்கு கூடுதல் முனைப்பு காட்டப் போவதாக ஜாமா தெரிவித்துள்ளார்.

ஜாமா ஓர் மாற்றுத் திறனாளி என்பதுடன், மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்புக்களையும் வழிநடத்தி செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam