இலங்கை செய்திகள்

இடமாற்றக் கடிதங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களின் சம்பளம் நிறுத்தப்படும் - கல்வி அமைச்சு

16 May 2018

தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட  இடமாற்றக் கடிதங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களின் சம்பளம் நிறுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய பாடசாலையொன்றில் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய கல்வி சாரா ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இதுவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதிகம் காணப்படுவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த இடமாற்றங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரவேண்டியிருந்தன. இதனால், இடமாற்றம் வழங்கப்பட்டும் அதனை நடைமுறைப்படுத்தாக சுமார் 100 கல்வி சாரா ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்