உலகம் செய்திகள்

இங்கிலாந்து கடல் பகுதியில் 2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு கண்டுபிடிப்பு

12 Jul 2018

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் டிவான் (Devon) கடற்கரைப் பகுதியில் ஜேம்ஸ் கன்னிங்ஹாம் (James Cunningham)என்ற இளைஞர் ஸ்கூபா டைவிங் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது கடலுக்குள் கிடந்த வெடிகுண்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜேம்ஸ், அதுபற்றி கடற்படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து 2 ஆயிரத்து 600 பவுண்டு எடை கொண்ட வெடிகுண்டை மீட்ட கடற்படையினர் ஆராய்ந்தபோது வெடிக்கும் தன்மையுடன் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து கடலுக்குள் பாதுகாப்பான தூரத்திற்கு குண்டைக் கொண்டு சென்று வெடிக்க வைத்தனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்