உலகம் செய்திகள்

இங்கிலாந்தில் மேலும் 42,484 பேருக்கு கொரோனா பாதிப்பு...!

24 Nov 2021


இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,484 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 99,32,408 ஆக உயர்ந்துள்ளது. 


தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 87  லட்சத்து 91 ஆயிரத்து 315 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 9,96,956 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam