உலகம் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இரவு விடுதி வெளியே துப்பாக்கி சூடு

14 Apr 2019

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிரஹ்ரான் மாவட்டத்தில் உள்ள லிட்டில் சேப்பல் தெரு மற்றும் மால்வெர்ன் சாலை அருகே இரவு விடுதி ஒன்று அமைந்துள்ளது.

இந்நிலையில், விடுதிக்கு வெளியே அதிகாலை 3.20 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.  இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து உள்ளனர்.  உள்ளூர் ஊடகங்கள் 3 அல்லது 4 பேர் காயம் அடைந்திருக்க கூடும் என தெரிவிக்கின்றது.  எனினும் விக்டோரியா போலீசார் விரிவான விவரங்களை வெளியிடவில்லை.  இந்த துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் தெரியவரவில்லை.

ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிக அரிது.  கடந்த 1996ம் ஆண்டு தாஸ்மானியாவில் 35 பேர் சுட்டு கொல்லப்பட்ட பின்னர் கடுமையான துப்பாக்கி சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன்பின் கடந்த வருடம் மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்தில் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்