கனடா செய்திகள்

ஆற்றில் தவறி விழுந்த தமிழ் இளைஞனைக் காணவில்லை

12 Jul 2017

கடந்த ஞாற்றுக்கிழமை கனடாவின் ப்ரைரிஸ் (Prairies) நதியில் தவறி வீழ்ந்து தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

20 வயதான அனோஷன் நாகேஸ்வரா என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் மொன்றியல் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸரால் நேற்று மாலை வரை இளைஞனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நேற்று 4 மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை இன்று மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியலுக்கு மேற்கே Pierrefonds என்னும் இடத்தில் உள்ள ஆற்றிற்கு அருகே நின்று இவ் இளைஞன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது கால் தவறி ஆற்றிற்குள் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்ற உடன் சென்ற தோழி முயற்சி செய்தபோதும் அது பயனளிக்கவில்லை.

அனோஷன் நாகேஸ்வரா காணாமல் போயுள்ள நிலையில் அவரது உறவினர்கள் சோகத்துடன் அவரது வருகைக்காக ஆற்றங்கரையில் காத்திருக்கும் நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV