கனடா செய்திகள்

ஆறு பேர் கனேடிய பிரஜைகளாக வித்தியாசமான முறையில் உறுதி ஏற்றனர்

10 Oct 2018

பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆறு பேர் கனேடிய பிரஜைகளாக குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளனர். குறித்த ஆறு பேரும் நேற்று செவ்வாய்க்கிழமை கனேடிய பிரஜைகளாக உறுதியை ஏற்றுக் கொண்டனர்.

மிகவும் வித்தியாசமான முறையில் உலகின் மிக உயரமான கட்டடங்களில் ஒன்றான சி.என். போபுரத்தின் விளிம்பில் தொங்கியபடி குறித்த ஆறு பேரும் கனேடிய பிரஜைகளாக உறுதியேற்றுக் கொண்டனர்.

கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசைனின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. எட்ஜ்வோக் என்றழைக்கப்படும் 116 மாடிகளை கொண்ட கட்டடத்தில் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் விளிம்பில் கேபிள்களில் தொங்கியபடி குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வை தொடர்ந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட குடிவரவு அமைச்சர், ‘கனேடிய குடியுரிமைக்கு வானமே எல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பன்முக கலாசாரத்திற்கு பெருமை சேர்த்து வரும் கனடா, 2017ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 70 ஆயிரம் புதிய குடியேற்றவாசிகளை நாட்டுக்குள் அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்