இலங்கை செய்திகள்

ஆறு நாள் குழந்தை கொரோனா தொற்றால் மரணம்

13 Sep 2021

பலங்கொட வைத்தியசாலையில்  பிறந்து ஆறு நாட்களேயான குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 5 ஆம் திகதி பிறந்த குறித்த குழந்தை சுவாசப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam