கனடா செய்திகள்

ஆர்டிக் பிராந்தியம் மீதான சுற்றுக் காவல் நடவடிக்கை பிற்போடப்பட்டது

17 Jul 2017

ஆர்டிக் பிராந்தியம் மீது ஆளில்லா விமானம் மூலம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுக் காவல் நடவடிக்கை, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த அந்த ஆளில்லா விமானம் மிகவும் பெரியதாக காணப்படுவதாகவும், அதனால் அது ஒருவகை ஏவுகணையாகவே வகைப்படுத்தப்படுவதாகவும், அதனால் அந்த ஆளில்லா விமானத்தினை கடுமையான ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டங்களின் காரணமாக தற்போதைக்கு பயன்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக MTCR எனப்படும் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டுச் சட்டமே இதன் விநியோகத்துக்கு தடையாக உள்ளதாகவும், இந்த தடைச் சட்டம் குறித்த இணக்கப்பாட்டில் கனடா உள்ளிட்ட 35 நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக அனுமதி இரண்டு ஆண்டுகளின் முன்னரே கனேடிய போக்குவரத்து திணைக்களத்திற்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV