கனடா செய்திகள்

ஆர்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரிப்பு

14 Apr 2019

ஆர்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்கேய் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஆர்டிக் பகுதியை தக்க வைத்துக்கொள்வதற்கு கனடா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து கவனம்செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடா தனது எல்லைகளை பாதுகாத்துக் கொள்வதில் அதிக முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்