உலகம் செய்திகள்

ஆப்பிளின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அறிமுகம்

15 Sep 2021

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட பல்வேறு புதிய சாதனங்களை நேற்று அறிமுகம் செய்தது. இந்த நிகழ்வு ஆன்லைனில் நேரலை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் ஐபோன் 13 சீரிஸ் மாடலில் மொத்தம் 4 ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஐபோன் 13 ரகம் மொத்தம் 5 நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 13 மினி மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது.


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 13 இதற்கு முந்தைய அறிமுகமான ஐபோன் 12-ஐ விட கூடுதலாக 2.5 மணி நேரம் பேட்டரி செயல்திறனை அதிகம் பெற்றுள்ளது. அதேபோல், புதிய அறிமுகமான ஐபோன் 13 மினி முந்தைய அறிமுகமான ஐபோன் 12 மினியை விட கூடுதலாக 1.5 மணி நேரம் பேட்டரி செயல்திறனை அதிகம் பெற்றுள்ளது.

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகிய இரண்டும் 128 ஜிபி முதல் 512 ஜிபி வரையிலான சேமிப்பு திறன் கொண்டதாக உள்ளது.

விலையை பொறுத்தவரை ஐபோன் 13 மினியின் துவக்க விலை 699 அமெரிக்க டாலர்களுக்கும், ஐபோன் 13 துவக்கவிலை 799 அமெரிக்க டாலர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபோன் 13 மினி சேமிப்பு திறன் அடிப்படையில் 69,900 ரூபாய், 79,900 ரூபாய், 99,900 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 13 விலை சேமிப்பு திறன் அடிப்படையில் 79,700 ரூபாய், 89,900 ரூபாய், 99,900 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

இதனை தொடர்ந்து ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய ரக மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் 13 ப்ரோ 6.1 இன்ச் ஸ்கீரின் அளவையும், ஐபோன் 13 மேக்ஸ் 6.7 இன்ச் ஸ்கீரின் அளவையும் கொண்டதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விலையை பொறுத்தவரை ஐபோன் 13 ப்ரோ 999 அமெரிக்க டாலருக்கும், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸை 1,099 அமெரிக்க டாலருக்கும் நிர்ணயிகப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபோன் 13 ப்ரோ விலை சேமிப்பு திறன் அடிப்படையில் 1,19,00 ரூபாய், 1,29,900 ரூபாய், 149,900 ரூபாய் மற்றும் 1,69,900 ரூபாய்க்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் விலை சேமிப்பு திறன் அடிப்படையில் 1,29,900 ரூபாய், 1,39,900 ரூபாய், 1,59,900 ரூபாய் மற்றும் 1,79,900 ரூபாய்க்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன்களின் முன்பதிவு செப்டம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. இவை செப்டம்பர் 24-ம் தேதி நேரடி விற்பனை தளத்திற்கு வர உள்ளது.  

இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட், ஐபேட் மினி மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 உள்பட பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam