உலகம் செய்திகள்

ஆப்கானிஸ்தான்: மதவழிபாட்டு தளம் அருகே குண்டுவெடிப்பு - 8 பேர் பலி

06 Aug 2022

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் அவ்வப்போது குண்டுவெடிப்பு, தற்கொலைப்படை பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபுல் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மத வழிபாட்டு தளம் அருகே நேற்று பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam