உலகம் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தின் அதிரடியில் 27 தலீபான்கள் பலி

14 Apr 2019

ஆப்கானிஸ்தானின், நங்கர்ஹார் மாகாணத்தில் ஷிர்ஜாத் மாவட்டத்தை கைப்பற்றும் நோக்கத்தில் நேற்று முன்தினம் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். ஆனால் அந்த நாட்டின் ராணுவம் உஷாராகி எதிர் தாக்குதல் தொடுத்தது. இந்த தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் நிலை குலைந்து போயினர்.

தாக்குதல் முடிவில் 27 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த மோதலின்போது ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோதலைத் தொடர்ந்து தலீபான்கள் ஓட்டம் பிடித்து விட்டனர். அதனால் ஷிர்ஜாத் மாவட்டத்தை கைப்பற்றும் தலீபான் பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில், பாக்லான் மாகாணம், பாக்லான் இ மர்காஜி மாவட்டத்தில் சோதனைச்சாவடி ஒன்றை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான் படையினர் 8 பேர் பலியாகினர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்