இலங்கை செய்திகள்

ஆணைக்குழுவின் விசாரணைகளில் தலையிடப்போவதில்லை - ஜனாதிபதி உறுதி

12 Oct 2017

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் எதுவித தலையீடுகளையும் தம்மால் செய்யமுடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அதனை எதிர்கொண்டேயாக வேண்டுமென்றும், அதில் சமரசத்துக்கே இடமில்லையென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாசீம் ஆகியோர் நேற்றுக் காலை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV