இலங்கை செய்திகள்

ஆட்சி மாற்றம் குறித்து ஜனாதிபதியுடன் பேசிய விடயத்தை வெளிப்படுத்த முடியாது - பசில் ராஜபக்ஷ

11 Oct 2018

ஜனாதிபதியுடன் ஆட்சி மாற்றம் பற்றி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதாகவும்  பேசப்பட்ட விடயங்கள் குறித்து உடனடியாக ஊடகங்களிடம் கூறிவிட முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அரசாங்கத்தை மாற்றுவது தொடர்பில் மாத்திரமே நாம் கதைத்தோம். பேசிய விடயங்கள் இரகசியமானதாகும். இரகசியத்தை வெளிப்படுத்தினால் பேச்சுவார்த்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதனால் ஊடகங்களிடம் அவற்றைக் கூற முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்