இலங்கை செய்திகள்

ஆட்சிக்கு வரும் முன்னரே அட்டகாசத்தை தொடங்கிவிட்டனர் - மயந்த திஸாநாயக்க

08 Nov 2019

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவின் பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை வன்மையாக கண்டித்துள்ள  ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, ஆட்சிக்கு வரும் முன்னரே அட்டகாசத்தை தொடங்கிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் நவீன் திஸாநாயக்க அரசியலுக்குள் பிரவேசிக்கும்போதும் இதேபோன்றதொரு தாக்குதலுக்கு இலக்கானார். எனினும், அப்போது அநுர பண்டாரநாயக்க இருந்ததால் நவீன் தப்பிக்கொண்டார் என்றும் அவர் கூறினார்.   

எவ்வாறாயினும், ஆட்சிக்கும் வரும் முன்பே இவர்கள் அட்டகாசத்தை ஆரம்பித்துவிட்டனர் எனத் தெரிவித்த அவர்,  சம்பவம் தொடர்பிலான  விசாரணைகளை பொலிஸார் துரிதமாக முன்னெடுக்க வேண்டுமென்றார். 

கொழும்பில், நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சத்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்