இலங்கை செய்திகள்

ஆசிரியரை வீடு புகுந்து தாக்கிய மாணவர்கள்

24 May 2023

ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு மாணவர்களை எச்சரித்ததையடுத்து ஆத்திரமடைந்த மாணவர்கள், ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம், புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தளம்  முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

புத்தளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஒழுக்கத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் எச்.எம்.அஸ்கியின் வீட்டிற்குள் புகுந்தே ஆசிரியரை மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

இவ்வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் குழுவினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வர் எதிர்வரும் 26ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்..






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam