19 Sep 2023
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியா செல்வதற்காக நிறுவனம் ஒன்றிடம் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார்.
ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விளம்பரங்கள் மூலமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அறிமுகமாகி கட்டம் கட்டமாக 75 இலட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிட்டுள்ளார்.
வங்கியில் பணம் வைப்பிலிட்டு நீண்ட காலமாக ஏமாற்றமடைந்ததால் யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்தார்.
அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த யாழ்.மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது சந்தேநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சந்தேகநபரால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது