உலகம் செய்திகள்

ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணின் முகம் மீண்டும் அழகாக மாறியது

01 Nov 2017

இங்கிலாந்தின்  கிழக்கு லண்டனை சேர்ந்தவர் ரேஷ்கான் (21), இவர் தனது உறவினர் ஜமீல் முக்தருடன் கடந்த ஜூன் மாதம் பிறந்தநாள் கொண்டாடிய போது மர்ம நபர் ஒருவர் இருவர் முகத்திலும் ஆசிட் வீசினார்.

இதில் ரேஷ்கானின் முகம் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சம்பவம் தொடர்பாக ஜான் டொம்லின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.ஆசிட் வீச்சுக்கு பின்னர் தான் அனுபவிக்கும் வலிகள் மற்றும் வேதனை குறித்து ரேஷ்கான் சில மாதங்களுக்கு முன்னர் விவரித்திருந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேஷ்கான் புகைப்படங்கள் வெளிவந்ததே தவிர அதன் பிறகான புகைப்படங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் சிகிச்சை முடிந்து மீண்டும் அழகு பதுமையாக காட்சியளிக்கும் தனது புகைப்படங்களை ரேஷமின் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவரின் போராட்ட குணம் மற்றும் தன்னம்பிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV