விளையாட்டு செய்திகள்

ஆக்கி லீக் போட்டி: தமிழ்நாடு மின்வாரிய அணி அபாரம்

24 Nov 2022


சென்னை ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு மின்வாரிய அணி 7-0 என்ற கோல் கணக்கில் அண்ணா நினைவு கிளப்பை தோற்கடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் ஹபிபுல்லா நினைவு கிளப் 9-1 என்ற கோல் கணக்கில் அடையார் யங்ஸ்டர்ஸ் அணியை வென்றது. இன்னொரு ஆட்டத்தில் ஏர் இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் யாசின் ஸ்போர்ட்ஸ் கிளப்பை ஊதித்தள்ளியது.


 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam