உலகம் செய்திகள்

அவுஸ்திரேலிய அரசு இணையதளங்கள் மீது தாக்குதல்!

12 Feb 2018

அவுஸ்திரேலிய அரசு இணையதளங்கள் கிரிப்டோஜேக்கிங் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.

இது பிரவுசர்களின் மூலம் ஊடுருவும் மால்வேர் (அயடறயசந)இ பயனாளிகளுக்கே தெரியாமல் அவர்களின் கணினிஇ மொபைல் இஉள்ளிட்ட சாதனங்களில் உள்ள கிரிப்டோ கரன்சி எனும் டிஜிட்டல் கரன்சியில் இருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை எடுப்பதாகும்.

பாதிக்கப்பட்ட இணையதளத்தில் நுழையும் பயனாளிகளின் சாதனங்களில் ஊடுருவும் மால்வேர்இ

புதிதாக இன்ஸ்டால் செய்யும் பிரவுசர்களிலும் ஊடுருவத்தக்கது.

இதே போல் அவுஸ்திரேலியாவின் விக்டோரிய நாடாளுமன்றம்இ சட்ட ரீதியான நிர்வாகத் தீர்ப்பாயம்இ நீர் விநியோகம் உள்ளிட்ட பல இணையதளங்களில் இந்த வகையான மால்வேர் ஊடுருவியுள்ளது.

இதேபோல்இ கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு எழுத்துருக்களை குரலாக மாற்றி ஒலிக்கச் செய்யும் பிரவுசரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதால் அதன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அரசு இணையதளங்களில் கூடுதல் பாதுகாப்பு அவசியம் என தொழில்நுட்ப வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்