உலகம் செய்திகள்

அழகு சாதனப் பொருட்களில் மனிதக்கழிவு

16 Apr 2018

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பூட்லெக் (Bootleg) என்னும் நிறுவனம் விற்பனை செய்யும் அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின்  அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தியவர்களுக்கு தோல்சார்ந்த பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த நிறுவனப் பொருட்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட ஒருவர் புகாரின் அடிப்படையில் போலீசார், அந்த நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைக்கு ரகசியமாக வாடிக்கையாளர்கள் போன்று சென்று, மலிவு விலையில் விற்கப்பட்ட மேக்அப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.  பின்னர் இவற்றை சோதனைக்குட்படுத்தியதில் அபாயகரமான பாக்டீரியாக்கள் மற்றும் மனித, விலங்கு கழிவுகளும் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 21 கடைகளிலிருந்து இந்திய மதிப்பில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான அழகு சாதன பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்