உலகம் செய்திகள்

அல்-கொய்தா தலைவர் பலி: வெளிநாடு செல்லும் அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை

04 Aug 2022

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பதுங்கியிருந்த அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் அல்-ஜவாஹிரியின் கொலைக்கு பழித்தீர்க்கும் விதமாக அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அல்-ஜவாஹிரியின் மரணத்தைத் தொடர்ந்து, அல்-கொய்தாவின் ஆதரவாளர்கள் அல்லது அதனுடன் இணைந்த பயங்கரவாத அமைப்புக்கள், அமெரிக்க நிலைகள், பணியாளர்கள் மற்றும் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்படலாம். எனவே அமெரிக்க குடிமக்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அதிக விழிப்புணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உள்ளூர் செய்திகளைக் கண்காணிக்கவும், அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணை தூதரகத்துடன் தொடர்பைப் பேணவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதோடு அவசரகாலத்தில் அவர்களைக் கண்டறிவதை எளிதாக்குவதற்கு ஸ்மார்ட் டிராவலர் என்ரோல்மென்ட் திட்டத்தில் பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam