இலங்கை செய்திகள்

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் காலமானார்

12 Jul 2019

 

யாழ். மறைமாவட்ட மூத்தகுரு அருட்பணியாளர் ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் அவர்கள் கடந்த 11.07.2019 வியாழக்கிழமை தனது இவ்வுலகப் பணியை நிறைவுசெய்து இறைவனடி சேர்ந்துள்ளார்.

 

இவர் கிளிநொச்சி ஆரோபணம் இளைஞர் இல்லத்தின் இயக்குநராகவும், யாழ். மனித முன்னேற்ற நடுநிலையத்தின் இயக்குநராகவும், செட்டிகுளம்இ பூநகரி, முழங்காவில், முல்லைத்தீவு, மாங்குளம், கொய்யாத்தோட்டம் ஆகிய பங்குத் தளங்களில் பங்குத் தந்தையாகவும், யாழ். மறைமாவட்டக் காணிப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

 

2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் உயிர்தப்பிய இவர் அதன் பின்னர் முல்லைத்தீவு மக்களுக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியது, அத்தோடு ஈழப் போராட்டத்திற்கும் அதன் உறுதுணையாக இருந்த பலருக்கும் இவர் ஆற்றிய பணிகள் இங்கு எழுதமுடியாதவை.

 

2009 இடப்பெயர்வு காலங்களில் குறிப்பாக போர் நிலவிய காலங்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த வலைஞர்மடம் தேவாலயத்தில் மக்களுக்கு அடைக்கலம் தந்து மக்களுக்கு உதவியாக இருந்தவர், வலைஞர் மடம் தேவாலயத்தின் மீதான எறிகணைவீச்சில் காயமடைந்து இன அழிப்பின் சாட்சியாக இருந்தவர்.

இறுதிவரை எல்லோராலும் அன்பாக நேசிக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று எம்மிடையே இல்லை.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்