இலங்கை செய்திகள்

அரிசி இறக்குமதியை தடை செய்ய தீர்மானம்

13 Feb 2020

அரிசி இறக்குமதியை தடை செய்யும் வகையிலான கொள்கை ரீதியான தீர்மானமொன்றை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது,

அரிசி இறக்குமதியை கட்டுப்படுத்தியதன் மூலம் நாட்டிற்கு 100 மில்லியன் டொலர் அந்நிய செலாவணியை சேமிக்க முடிந்துள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்து அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சந்தையில் அரிசி விலை அதிகரித்துள்ள நிலையிலேயெ இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரும் போகத்திற்கான  நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனூடாக 30 இலட்சம் மெட்ரிக் தொன் அறுவடையை இம்முறை பெற்றுக் கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நெல் கிலோவொன்றுக்கு 50 ரூபா நிர்ணய விலையில் கொள்வனவை  மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.,






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்