இலங்கை செய்திகள்

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு

12 Jan 2019

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, எதிர்வரும் திங்கட்கிழமை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக நாமல் குமார வெளியிட்டுள்ள தகவல்களுக்கு அமையவே, பொலிஸ்மா அதிபருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்