இலங்கை செய்திகள்

அரசியல் நெருக்கடியை ஒரு வாரத்துக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி கூறுவதில் நம்பிக்கையில்லை -குமார வெல்கம

06 Dec 2018

தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை ஒரு வாரத்துக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி கூறியுள்ள கருத்தில் தனக்கு நம்பிக்கையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது சகலருடன் இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதி கூறினார். தேர்தல் நெருங்கிய போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியைத் தரமாட்டேன் எனக் கூறினார். தற்பொழுதும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையும் முன்னையதைப் போன்றதாகும் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரதமர்கள் தொடர்பில் ஒவ்வாமை தன்மையொன்று காணப்படுவதாகவும் குமார வெல்கம மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை, மஹிந்த ராஜபக்ஷவின் ஆசீர்வாதத்துடன் பொது அபேட்சகராக அழைப்பு விடுக்கப்பட்டால், தான் அதனை ஏற்பதற்குத் தயார் என்றும் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்