இலங்கை செய்திகள்

அரசியல் தீர்வின் பின்னரே அபிவிருத்திகள் செயற்படுத்தப்பட வேண்டும் - விக்னேஸ்வரன்

12 Jul 2018

“வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­களை  திணிப்­பதன் மூலம் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தி­விட முடி­யாது. எமது வடக்கு, கிழக்கு மக்­களின்  அர­சியல் தீர்­வா­னது முதலில்  ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே   அபி­வி­ருத்­திப்­ப­ணிகள்   செயற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்” என்று வட­மா­காண முத­ல­மைச்சர்  சி.வி. விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாண முன்­னேற்­றப்­ப­ணிகள் குறித்து ஆராய்­வ­தற்­காக 48 பேர் கொண்ட   ஜனா­தி­பதி  செய­ல­ணி­யை  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  அண்­மையில்   நிய­மித்­தி­ருந்தார்.   இந்த செய­லணி  நிய­மனம் தொடர்பில் அதி­ருப்தி தெரி­வித்து  ஜனா­தி­ப­திக்கு வட­மா­காண முத­ல­மைச்சர் அனுப்­பி­வைத்­துள்ள  கடி­தத்­தி­லேயே  இவ்­வாறு  தெரி­வித்­துள்ளார். 

அந்தக் கடி­தத்தில்   “தங்­களால் தலைமை தாங்­கப்­ப­ட­வி­ருக்கும் செய­லணி  பிர­தம மந்­திரி, 15 கௌரவ மத்­திய அமைச்­சர்கள், வட­கி­ழக்கு மாகா­ணங்­களின் ஆளு­நர்கள், வட­மா­காண முத­ல­மைச்­ச­ரா­கிய என்­னையும், தற்­போது வெற்­றி­ட­மா­க­வுள்ள கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரையும், இரா­ஜாங்க அமைச்சர் ஒருவர், முன் கூறிய பிர­த­ம ­மந்­திரி அடங்­கிய மத்­திய அமைச்­சர்கள் அனை­வ­ரதும் அமைச்­சுக்­களின் செய­லா­ளர்கள், வட­கி­ழக்கு மாகா­ணங்­களின் பிர­தம செய­லா­ளர்கள், இரா­ணுவம், கடற்­படை, விமானப்­படை ஆகி­ய­வற்றின் கட்­டளைத் தள­ப­திகள், பொலிஸ்மா அதிபர், யாழ். பாது­காப்புப் படையின் தள­பதி, கிழக்குப் பாது­காப்புப் படை­களின் தள­பதி, மேலும் சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் ஆகி­யோரை உள்­ள­டக்­கி­யுள்­ளது. 

என்­னையும் எமது பிர­த­ம ­செ­ய­லா­ள­ரையும் தவிர வட­மா­கா­ணத்தை அங்­கத்­துவம் வகிக்க வேறெ­வரும் அதில் இல்லை. செய­ல­ணியின் செய­லாளர் (சிவ­ஞா­ன­சோதி) வட­மா­கா­ணத்தைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும் அவர் மத்­திய அரசின் அலு­வலர் ஆவார். 

செய­ல­ணியின் வட,­ கி­ழக்கு பற்­றிய முன்­னேற்ற செயற்­பா­டுகள் நாட்டின் ஐக்­கி­யத்­தையும் ஒன்­றி­ணை­வையும் ஏற்­ப­டுத்தி சம­மான சமூக பொரு­ளா­தார வளர்ச்­சி­யையும் வரு­மான வளர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்தும் என்று குறித்த கடி­தத்தில் கூறப்­பட்­டுள்­ளது. வட­, கி­ழக்கு மாகா­ணங்­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் செயற்­றிட்­டங்­களின் மீளாய்வு உள்­ள­டங்­கிய பல வித பணிகள் குறித்த செய­ல­ணிக்கு அடை­யா­ளப்­ப­டுத்தி கொடுக்­கப்­பட்­டுள்­ளன. 

வட,­கி­ழக்கில் நடை­பெற்­று­வரும் முன்­னேற்றப் பணிகள் அனைத்­தையும் நடத்­து­விக்கும், ஒருங்­கி­ணைக்கும், மேற்­பார்வை பார்க்கும் பணி ஜனா­தி­பதி செய­ல­ணி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

என்­னையும் எமது பிர­த­ம­ செ­ய­லா­ள­ரையும் இந்த செய­ல­ணி­யினுள் உள்­நு­ழைத்­த­மைக்­காக நான் உங்­க­ளுக்கு முதலில் நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன். பல மத்­திய அமைச்­சர்­களும் அவர்­களின் அமைச்சுச் செய­லா­ளர்­களும் இந்தச் செய­ல­ணியில் சேர்க்­கப்­பட்­டி­ருப்­பினும் எமது வட­மா­காண அமைச்­சர்கள் இதில் விடு­பட்­டுள்­ளார்கள். எமது அமைச்­சர்­களின் மற்­றைய செய­லா­ளர்­களும் விடு­பட்­டுள்­ளார்கள். உங்கள் தேர்வில் இது ஒரு பாரிய தவ­றாக எனக்­குப்­ ப­டு­கின்­றது. 

வட,­கி­ழக்கின் பொரு­ளா­தார விருத்தி நாட்டின் ஐக்­கி­யத்தை உறுதி செய்யும் என்ற உங்கள் எதிர்­பார்ப்பு இடந்­ த­வ­றி­ய­தா­கவே எனக்­குப்­ ப­டு­கின்­றது. அர­சியல் ரீதி­யாக பாதிக்­கப்­பட்ட வட­,கி­ழக்கு மக்கள் மீது பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­களைத் திணிப்­பதன் மூலம் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தி­வி­ட­ மு­டி­யாது. எமது வட­,கி­ழக்கு மக்­களின் அர­சியல் தீர்­வா­னது முதலில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே அபி­வி­ருத்திப் பணிகள் செயற்­ப­டுத்­தப்­பட வேண்டும். தென்­னா­பி­ரிக்­காவில் அர­சியல் தீர்வு பெற்ற பின்­னரே உண்­மைக்கும் சம­ர­சத்­துக்­கு­மான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. 

தெற்­கா­னது வட­,கி­ழக்­குக்கு இவ்­வா­றான அபி­வி­ருத்திப் பணி­களை செய்­தி­ருப்­ப­தாக ஜெனி­வா­விலோ வேறெங்­குமோ உலக சமு­தா­யத்­திற்கு நாம் எடுத்துக் காட்­டி­னாலும் போர் முடிந்து ஒன்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக வட,கி­ழக்கு மக்­களின் அடிப்­படை அர­சியல் பிரச்சினை­களைத் தொடர்ந்து வந்­துள்ள மத்­திய அர­சாங்­கங்கள் தீர்க்­க­வில்லை என்ற விட­யத்தை நாம் மூடி மறைக்­க ­மு­டி­யா­தி­ருக்கும்.

ஆகவே எமது மக்கள் தமது  அர­சியல்  உரித்­துக்­க­ளையும் மனித உரி­மை­க­ளையும்  நீங்கள் தரும்  பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியின் பொருட்டு கைவிட்டு விடு­வார்கள் என்று  எண்­ணு­வது  தவ­றான செயற்­பா­டாகும்”  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்