இலங்கை செய்திகள்

அரசியல் இலாபங்களுக்காகவே ஏக்கிய ராஜ்ஜிய என்பதை பலர் துக்கிப் பிடிக்கின்றார்கள் - சி.தவராசா

12 Jan 2018

ஏக்கிய ராஜ்ஜிய - ஒருமித்த நாடு என்பது தொடர்பில் எவரும் குழம்ப வேண்டிய தேவையில்லை அதற்குரிய வரைவிலக்கணம் இடைக்கால அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்படுள்ளது என வட மாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கை தொடர்பில் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,”இதைத் தெரிந்தவர்கள் பலபேர் அரசியல் இலாபங்களுக்காகவும் தாங்கள் அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும்,  செயல்திறன் அற்றவர்கள் தங்களுடைய செயல்திறனை மூடி மறைப்பதற்காகவும் இதனை எடுத்து தற்போது இதற்கு எதிராக கதைத்துகொண்டிருக்கின்றார்கள்.

இடைக்கால அறிக்கையில் பொருள்கோடல் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கின்றது. இடைக்கால அறிக்கையில்  சமஷ்டிக்கான அடிப்படை விடயங்கள் இருக்கின்றது. சமஸ்டி என்பது பெரிய பலூன் போன்றது. இதில் இன்னும் செழுமை படுத்தப்படக் கூடிய விடயங்களை மேற்கொள்ள வேண்டும். மாறாக சரியில்லை, சரியில்லை என்று சொல்வதில் எதுவித பிரயோசனமும் இல்லை” என கூறியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV