இலங்கை செய்திகள்

அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது

11 Jan 2019

அரசியலமைப்பு சபை இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ள நிலையில் அதற்கு பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போது அரசியல‍மைப்பு சபை நாளை (இன்று) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூடுமென பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

சபாநாயகரின் இந்த அறிவிப்பானது நிலையியல் கட்டளைகளுக்கு முரணான ஒன்றாக காணப்படுவதாக கூறி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

எனினும் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி அதனை நிராகரித்து ஏற்கனவே அறிவித்தபடி அரசியலமைப்பு சபை கூடும் என அறிவித்தார். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்