15 Sep 2023
கனடாவின் நான்கு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் அரசாங்க இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் சில அரசாங்க நிறுவனங்களின் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
யுகோன், மனிடோபா, பிரின்ஸ் ஒப் எட்வர்ட் மற்றும் நுனவட் ஆகிய மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் இவ்வாறு இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனிப்பட்ட தரவுகள் கசியவில்லை என அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இணைய தளங்களை ஹெக் செய்து, தகவல்களை முடக்கும் வகையில் இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் கனடாவில் அரச நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.