இலங்கை செய்திகள்

அரசாங்கம் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளை கேட்பதில்லை - கோட்டாபய

13 Mar 2018

நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு மகாசங்கத்தினரின் ஆலோசனைகளைக் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்படுவதே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நாம் பொறுப்பில் இருக்கும் போது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு  முதலில்  மகாசங்கத்தினரை பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்து ஆலோசனை செய்வோம். அவர்களின் ஆலோசனையின் பிரகாரமே செயற்படுவோம்.  ஆனால், இன்று மகாசங்கத்தினரைக் கேட்பதற்குப் பதிலாக அரச சார்பற்ற சர்தேச நிறுவனங்களிடமே கேட்கப்படுகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

குளியாப்பிட்டிய நகரில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார். இந்நிகழ்வில் மல்வத்து பீட மகாநாயக்கர் உட்பட பெரும் எண்ணிக்கையிலான தேரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV