இலங்கை செய்திகள்

அரசாங்கமும் தமிழ் தலைமைகளும் இணைந்தே மக்களை ஏமாற்றியுள்ளனர் - வியாழேந்திரன்

12 Jul 2019

அரசாங்கம் தமிழ் தலைமைகளையோ, தமிழ் தலைமைகள் அரசாங்கத்தையோ ஏமாற்றவில்லை. மாறாக இருவரும் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கம் தமிழ் தலைமைகளை ஏமாற்றவில்லை. தமிழ் தலைமைகள் அரசாங்கத்தை ஏமாற்றவில்லை. இரு தரப்பினரும் மக்களையே ஏமாற்றியுள்ளனர்.

இதுவரையில் தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வை வழங்கவில்லை.

எனவே, தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை விடயத்தில் தமிழ் தலைமைகள் செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்