இலங்கை செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

11 Jul 2019

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இன்றும் இது தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளது. விவாதங்கள் நிறைவடைந்ததும் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிக்கொள்வதற்காக, அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்களென, தான் எதிர்பார்ப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க, ஐக்கிய தேசிய கட்சி செயற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்