இலங்கை செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் 22ம் திகதி ஆரம்பம் - ஜே.வி.பி

16 May 2018

மக்களை சிரமப்படுத்தும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் இம்மாதம் 22 ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிப்பதாக ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை, பெலவத்தை, ஜே.வி.பி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“மக்களுக்கு பொருட்களின் விலையேற்றம் குறித்து விளக்கமளிக்கத் தேவையில்லை. ஏனெனில், அவர்கள் இதனை அன்றாடம் அனுபவிப்பவர்கள். அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பொருளாதார அபிவிருத்தி குறித்து எவ்வளவுதான் பேசினாலும், அது நடக்கப் போவதில்லை.

இதனால், மக்கள் போராட்டமொன்றை இதற்கு எதிராகக் கொண்டு வந்து விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அதுவும், முடியாது போனால் மக்கள் அனைவரும் இணைந்து இந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்” என அவர் குறிப்பிட்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்