இலங்கை செய்திகள்

அரசமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது

10 Jan 2019

நாட்டுக்கு புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக அரசமைப்பு பேரவை நாளை காலை 10.30 க்கு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது.

செயற்குழுவில் சமர்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை, அரசமைப்பு பேரவையில் நாளை முன்வைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களும் இதன்போது கருத்து தெரிவிக்கவுள்ளனர் எனவும், அரசமைப்பு பேரவை செயற்பாடுகள் 12.30 மணிவரை இடம்பெறும் எனவும், அத​ன் பின்னர் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்