உலகம் செய்திகள்

அமைதி-19 என்னும் கூட்டு இராணுவப் பயிற்சியில் சீனா பங்கெடுப்பு

11 Feb 2019

சீனக் கடற்படையைச் சேர்ந்த 998வது கப்பல் அணி உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 7ஆம் நாள் முற்பகல், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தைச் சென்றடைந்தது. “அமைதி-19”என்னும் பல நாடுகளின் கடல் கூட்டு இராணுவப் பயிற்சியில் இந்த அணி கலந்து கொள்ளவுள்ளது.

பாகிஸ்தான் கடற்படை, வரவேற்பு விழா சிறப்பாக நடத்தியது. கராச்சியிலுள்ள சீனத் துணை நிலை தூதர் வாங்யூ, இத்தூதரகத்தின் பணியாளர்கள், சீன முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அங்கே வாழும் சீனர்கள் ஆகியோர் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

பாகிஸ்தான் கடற்படை ஏற்பாடு செய்த இந்த இராணுவப் பயிற்சி, பிப்ரவரி 8 முதல் 12ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. பல்வேறு நாடுகள் கடல் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, கடல் பாதுகாப்பு மீதான அச்சுறுத்தலைச் சமாளிக்கும் திறனை உயர்த்துவது, இப்பயிற்சியின் நோக்கமாகும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்