இலங்கை செய்திகள்

அமைதியின்மையை ஏற்படுத்துபவர்களை கைது செய்வதற்காக ஹெலிகொப்டர்கள்!

15 May 2019

அமைதியின்மையை ஏற்படுத்துபவர்களை கைது செய்வதற்காக, இரவு நேரங்களில் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை சாதாரண நிலைக்குக் கொண்டு வரும் நோக்குடனே இவ்வாறு செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைதியின்மையை ஏற்படுத்தும் நபர்களை விமானம் மூலம் புகைப்படம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்