இலங்கை செய்திகள்

அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம்

14 Mar 2019

அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் கலந்து கொண்டிருந்தார். பூநகரி பகுதியில் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடல்  கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.30 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவில் ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெற்றது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ரவி கருணாநாயக்க பூநகரி பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் சக்தி உற்பத்தி தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மின் கட்டணம் உரிய முறையில் கணிக்கப்படாது அதிக கட்டணத்தை ஒரே தடவையில் கட்டுமாறு மக்களை பணித்து மின்துண்டிப்பு இடம்பெறுகின்றமை தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் தான் ஆராய்வதாக தெரிவித்தார். மூன்று மாதங்களுக்கு இந்த பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு இவ்வாறான இறுக்கமான கடைப்பிடிப்பை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர் இதன்போது அதிகாரிகளுக்கு பணித்தார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்