இலங்கை செய்திகள்

அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே மீண்டும் கைது

16 Apr 2018

இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே இற்கு பிணை வழங்கப்பட்டது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்..

2014 ஆம் ஆண்டு, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் 53 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதியை முறைக்கேடாக பயன்படுத்தி கெரம் மட்டும் சதுரங்க விளையாட்டு பலகைகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்