இலங்கை செய்திகள்

அமைச்சர் அசோக அபயசிங்க கிளிநொச்சி அரச பேருந்து சாலைக்கு விஜயம்

10 Jul 2018

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க இன்று கிளிநொச்சி அரச பேருந்து சாலைக்கு விஜயம்.


இன்று(ஜுலை10) காலை 9.30 மணியளவில் அமைச்சர் அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது அமைச்சர் அரச பேருந்து சேவைகள் மற்றும் பேருந்து சாலையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் பார்வையிட்டு ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

 

இதன்போது உரையாற்றிய அமைச்சர்,
கிளிநொச்சி சாலையில் மாத்திரமல்ல, நாடளாவிய ரீதியில் உள்ள சாலைகளில் நிரந்தரமான வேலையின்றி 2000 மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்பான விபரங்களை நாம் கோரியிருந்தோம். அதன்படி அவர்களிற்கான நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 700 ரூபா சம்பளத்துடன் இருப்பவர்கள் தொடர்பிலும் அவர்களின் சம்பள விடயம் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், கிளிநொச்சி மாவட்ட ஐ.தே.கட்சியின் அமைப்பாளர், சாலை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்