இலங்கை செய்திகள்

அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் கட்டுப்படுத்தப்படும்

23 Sep 2022

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam