உலகம் செய்திகள்

அமெரிக்க - வட கொரிய தலைவர்கள் சந்திப்பில் முக்கிய பங்கு வகித்த சிங்கப்பூர் தமிழர்கள்

13 Jun 2018

அமெரிக்க அதிபர் டிரம்ப்- கிம் ஜோங் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்களான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் சண்முகம் ஆகியோர் மிக முக்கிய பங்கு வகித்தனர்.

அமெரிக்காவும் வடகொரியாவும் நீண்ட நெடுங்காலமாக பகை பாராட்டி வந்த நாடுகள். இந்த இரு நாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க பேச்சு வார்த்தைகளை நடத்தி முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சரான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் சட்டம். உள்துறைக்கு பொறுப்பான அமைச்சரான கே. சண்முகம் ஆகிய இருவராவர். இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக கவனித்த, கண்காணித்த இரு அமைச்சர்கள் இவர்களாவர்.

டிரம்ப்- கிம் சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இரு தலைவர்களது சந்திப்பு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அதி முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். அனைத்தும் நன்மையில் முடிந்தது என்றார்.

வடகொரியா அதிபர் கிம், பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறர் என நம்புகிறேன் என்றார் . மேலும் தங்களது பேஸ்புக் பக்கத்தில் டிரம்ப்- கிம் ஆகியோரை வரவேற்றது இருவரது சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது உள்ளிட்ட விவரங்களை இந்த இரு அமைச்சர்களும் உடனுக்குடன் பகிர்ந்து பல தரப்புக்களின் பாராட்டுக்களை பெற்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்