உலகம் செய்திகள்

அமெரிக்க டாலருக்கு சமமாக பாகிஸ்தான் ரூபாய்

16 May 2019

அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத விதத்தில் 146 ரூபாயாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இம்ரான்கான் பிரதமராக பொறுப்பேற்ற போது டாலருக்கு நிகரான அந்நாட்டு ரூபாய் மதிப்பு 123 ரூபாயாக இருந்தது.

இது மேலும் குறைந்து தற்போது 146 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தான் அரசின் கையிருப்பு 50 சதவீதம் குறைந்து விட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. எனினும் சர்வதேச நாணய நிதியம் அளிக்கும் 600 கோடி டாலர் நிதி நிலைமையை ஓரளவு சமாளிக்க  உதவும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை 13 காசுகள் குறைந்து 70 ரூபாய் 33 காசுகளாக இருந்தது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்