இலங்கை செய்திகள்

அமெரிக்க குடியுரிமையை துறக்க தயாராகின்றார் கோட்டாபய

16 Mar 2019

முன்னாள் பாதுகாப்பு  செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை  நீக்குவதற்காக  அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை இடம்பெறுகின்றது.

பொதுஜன பெரமுனவிற்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த இழுபறி முடிவிற்கு வந்து, கோட்டாபய ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளர் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதனிடையே அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனினும் வெளிநாடு செல்ல அனுமதிகோரி, விசேட மேல் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் வெளிநாடு செல்ல தற்காலிக அனுமதி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

இதையடுத்து அமெரிக்க குடியுரிமையை துறக்கும் நடவடிக்கையை கோட்டாபய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்